தற்போது சென்செக்ஸில் நிலவரம் என்ன?

இந்திய சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக, ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

அதே போல இன்றும் ஒரு நிலையான ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இன்று சென்செக்ஸ், 32,500 புள்ளிகளுக்கு மேல் நிறை வடைந்தால் கொரோனா சரிவான 25,650 லெவல்களைத் தொட்ட பின், சென்செக்ஸ் காணும் மிகப் பெரிய எற்றமாக இருக்கும்.

அப்படி இன்று சென்செக்ஸ் 32,500 புள்ளிகள் தொடுமா? தற்போது சென்செக்ஸில் நிலவரம் என்ன? விரிவாகப் பார்ப்போம்.

நேற்று மாலை சென்செக்ஸ், 32,412 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது.

இன்று காலை சென்செக்ஸ் 32,311 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.

சென்செக்ஸின் இன்றைய அதிகபட்ச புள்ளியாக 32,483-ஐத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச புள்ளியாக 32,171 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 352 புள்ளிகள் ஏற்றத்தில் 32,467 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இன்னும் ஒரு 35 புள்ளிகள் ஏற்றம் கண்டால் 32,500-ஐத் தொட்டு விடும்.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

பிஎஸ்இ-யில் 1,994 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

அதில் 1,218 ஏற்றத்திலும், 701 பங்குகள் இறக்கத்திலும், 127 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஏப்ரல் 28, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் -1.40 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 1.91 % ஏற்றத்தில் வர்த்தகமானது.

பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.43 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.27 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

இன்று ஏப்ரல் 29, 2020, ஆசியாவில், ஜப்பானின் நிக்கி தவிர மற்ற எல்லா சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

அதிகபட்சமாக தைவானின் தைவான் வெயிடெட் சந்தை சுமாராக 1.36 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, கெயில் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆக்ஸிஸ் பேங்க், ஏஷியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே