தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தப்படவில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை.
கூட்டுறவு வங்கிக் கிளைகளில் நகைக் கடன் வழங்குவதற்கு என வரம்பு உள்ளது. அதன்படி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் வைப்புத் தொகை பாதிக்கப்படாத வகையில் நகைக் கடன் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.