நீட் தேர்வு எதிராக வெற்றி பெறுவோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு..!!

நீட் தேர்வு எதிராக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டை பொறுத்தவரை 1,10,971 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர்.இதில் ஒரு சிலர் இன்னமும் மன அழுத்தத்தில் உள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதிப்படி நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். நீட் தேர்வு எதிராக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “மிகப்பெரிய ஊக்கமாக மா.சுப்பிரமணியன் உள்ளார். பல விபத்துக்களை தாண்டி தற்பொழுது மாரத்தான்களில் பங்கேற்று வருகிறார். வெற்றி / தோல்வி அடைந்தவர்களுக்குத்தான் வரலாற்றில் இடம் உண்டு. விமர்சனம் செய்தவர்களுக்கு கிடையாது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து உங்களை செதுக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கான இடம் நிச்சயம் இருக்கும்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே