5 மற்றும் 8ம் வகுப்புக்கு மூன்றாண்டுகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் : செங்கோட்டையன்

தமிழகத்தில் 5 மற்றும் எட்டாம் வகுப்புக்கு மூன்றாண்டுகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற 47-ஆவது ஜவகர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு 90 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

ப்ளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு சிஏ படிப்புக்கான பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் பொது தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே