இன்று முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறப்பு..!!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன. அதேபோன்று, 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.

கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

அந்த ஆண்டுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இதையடுத்து, இன்று முதல், கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லுரிகளும் வாரம் 6 நாட்கள் செயல்பட உள்ளன.

மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. முன்னதாக கடந்த டிசம்பரில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியிருந்தன. 

ஜனவரி 18-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே