இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்றைய தினம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது, 5 லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திலும், இலங்கை தமிழரசு கட்சி 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளன.
இலங்கையின் மிகவும் பழைமையான கட்சியாக திகழ்ந்த ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.
அந்த கட்சி 50000 வாக்குகளை மட்டுமே பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மஹிந்த ராஜபக்சேவின் வெற்றியை தொடர்ந்து இந்திய பிரதமர் போனில் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.