முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏவுகணை நாயகனான அப்துல்கலாம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்ற பெருமைக்குரிய தலைவர் ஆவார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், டிடிவி தினகரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எல்லாத் தரப்பினரின் அன்பையும் பெற்று, மக்களின் குடியரசுத்தலைவராக திகழ்ந்த போற்றுதலுக்குரிய டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று.
மாணவர்கள்,இளைஞர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் கனவுகளை விதைத்த ஏவுகணை நாயகரை எந்நாளும் போற்றிடுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.