“இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்” முதல்வர் ட்வீட்

இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அப்துல் கலாமை இந்நாளில் வணங்கிப் போற்றுகிறேன் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் அவரை நினைவு கூர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்” என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே