திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன்.
அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லை என கூறப்படுகிறது.
இற்காக அவர் தனியார் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஆஞ்சியோ சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அமைச்சரின் உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.