ஹெரிடேஜ் குழுமம் ரூ.1000 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடித்துள்ளோம் – வருமான வரித்துறை

ஹெரிட்டேஜ் குரூப் நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

போலி நிறுவனங்களை தொடங்கி, அதன் மூலம் முதலீடுகளை பெற்று, 500 கோடி ரூபாய் மதிப்புடைய, 800 ஏக்கர் நிலத்தை, ஹெரிட்டேஜ் குழுமம் வாங்கியது 4ந் தேதி நடைபெற்ற சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது.

பல்வேறு வங்கிகளிடமிருந்து, வட்டிக்கு கடன்பெற்று, அதனை பல்வேறு நிறுவனங்களுக்கு, வட்டியில்லா கடனாக வழங்கிய வகையில், 423 கோடி ரூபாய் அளவிற்கு, வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட 5 ஷெல் நிறுவனங்கள் மூலம், பிரதான குழுமத்திடம் இருந்து 337 கோடி ரூபாய் நிதி பெற்று, ஹெரிட்டேஜ் குரூப் உரிமையாளரது மகனின் பெயரில், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே