தீபாவளியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் இரவு 11 மணி வரை நீட்டிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவை தெரிவித்திருந்தது.

அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மேலும் அரசு விடுமுறை தினங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்ச நேர இடைவெளியின்றி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது . 

எனவே பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே