கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து கேரள கவர்னர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஆனால், கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.

இருப்பினும், கடந்த வாரம் டெல்லியில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கொரோனா பரிசோதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கேரளாவின் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,62,469 ஐத் தொட்டது. தற்போது, ​​83,208 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே