பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து செல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – அமைச்சர் பாஸ்கரன்

பிஜேபியிடம் இருந்து நாங்கள் தனியாக பிரிந்து செல்வதற்கு எந்த நேரம் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசும் போது, பிஜேபியிடம் இருந்து நாங்கள் தனியாக செல்வதற்கு எந்த நேரம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். நீங்கள் எம்.எல்.ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை.

உள்ளாட்சி தேர்தல் எங்கள் கையில் இருந்தது 5 ஓட்டுக்கள் 3 ஓட்டுக்களில் எத்தனையோ பேர் தோற்றுள்ளார்கள்.

அதை நாங்கள் சொல்லி அறிவித்திருக்கலாமே, அதை நாங்கள் செய்யவில்லை. முதல்வர் அவர்கள் எந்த வேலையையும் சரியாக செய்ய சொல்லியுள்ளார்கள் என்று அவர் கூறினார்.

முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியான இளையான்குடியில், நாங்கள் பிஜேபியை வேண்டாம் என்று ஒதுக்கினாலும் நீங்கள் திமுகவிற்கு தான் ஓட்டுபோடுவீர்கள்.

திகார் சிறையில் இருந்தவர்களுக்கு நீங்கள் வாக்களித்துள்ளீர்கள் என்று அமைச்சர் பாஸ்கரன் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே