பொதுத்தேர்வு கட்டணம் அறிவிப்பு: 5-ம் வகுப்புக்கு 100 ரூபாய்; 8-ம் வகுப்புக்கு 200 ரூபாய்

இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அரசு அறிவிப்பைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை தொடக்கக்கல்வித்துறை தீவிரப்படுத்தியது.

தொடர்ந்து சமீபத்தில் தேர்வு மையங்கள் மாணவர்கள் பயில கூடிய பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய அரசின் முடிவு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த முடிவு மாற்றப்பட்டது.

5 மற்றும் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தாங்கள் பயிலக்கூடிய பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், தனியார் சுயநிதிபள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முறையே 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 ரூபாயும்; 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 200 ரூபாயும் தேர்வு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே