இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அனைத்துப் பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், பொருளாதார மந்த நிலை, ஜம்மு காஷ்மீரில் தலைவர்கள் சிறைவைப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பல எம்பிக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பொருளாதாரத்தை இந்தியாவுக்கு சாதகமான நிலையில் மாற்றலாம் என்ற விவாதத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.

இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாளை, மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

வருமான வரி வரம்பை உயர்த்தக் கோரி அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருமான வரி படிவம் 80 சியின் படி செய்யப்பட்டுள்ள சேமிப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையின் வரம்பை மத்திய அரசு உயர்த்தலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே