குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதா?

குரூப் 4 தேர்வில், நடைபெற்ற முறைகேடு தொடர்பான முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி முடிவை நாளை அறிவிக்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆலோசனை நடத்தினார்.

இதில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வாணைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில், தேர்வு முறைகேடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்; அதனை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுத்துறைகளில் காலியாக இருந்த கிராம நிர்வாக அலுவலர், நில அளவை அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 9 ஆயிரத்து 398 இடங்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தேர்வு நடைபெற்று. 

இதில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய ஊர்களில் உள்ள 9 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய வெளிமாவட்டத்தினர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள்ளாக தேர்ச்சி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே