ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு

முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரில் சமநிலை வகித்ததைதொடர்ந்து, தொடரை தீர்மானிக்கும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடக்க வீரர்களான தவானும், ரோகித்சர்மாவும் காயமடைந்து இருக்கும் நிலையில், அவர்கள் விளையாடுவது குறித்து போட்டிக்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்ததாக திகழ்வதால், அந்த  அணியை வீழ்த்த இந்தியா முழுதிறனுடன் செயல்பட வேண்டியிருக்கும்.

தொடரை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே