புதிய கல்விக் கொள்கை – ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

புதிய கல்விக்கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்,சேர்க்க வேண்டிய விசயங்கள் பற்றி வரும் 31ஆம் தேதிவரை பள்ளி முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் கருத்துக்களை கூறலாம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

https://innovateindia.mygov.in/nep2020 இந்த இணைய தளத்தில் அவர்களின் விவரத்தை தெரிவித்து, பாடங்களை படித்து பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில அரசுகள் புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில் நாளையில் இருந்து வருகிற 31ஆம்தேதி வரை பள்ளி முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

http://innovateindia.mygov.in/nep2020 இந்த இணைய தளத்தில் அவர்களின் விவரத்தை தெரிவித்து, பாடங்களை படித்து பார்க்கலாம்.

அதில் ஏதும் சேர்க்க, நீக்க வேண்டும் என்று கருதினால் கருத்து தெரிவிக்கலாம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே