ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ’சந்திரமுகி 2’ படம் கைவிடப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்த இந்தப் படம் 700 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, வசூலை வாரி குவித்தது.
பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த சந்திரமுகி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ரஜினி – வடிவேலு இருவருக்குமிடையேயான காமெடி காட்சிகள் ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு படம் குறித்த வேறெந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டு விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ராகவா லாரனஸ், ‘சந்திரமுகி 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை, அது வெறும் வதந்தி. பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி திரைப்படம் திட்டமிட்டபடி உருவாகும்” என உறுதியளித்துள்ளார். தவிர தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ’ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார் லாரன்ஸ்.