சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” – அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து

சுழலும் தன்மை கொண்ட ஆடுகளம் தொடர்பான உரையாடலின் சத்தம் ரொம்பவே அதிகமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் கோலி இதை கூறியுள்ளார்.

   Virat-Kohli-feels-there-is-too-much-of-noise-in-the-Conversation-about-Spinning-tracks

சுழலும் தன்மை கொண்ட ஆடுகளம் தொடர்பான உரையாடலின் சத்தம் ரொம்பவே அதிகமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் கோலி இதை கூறியுள்ளார். 

இங்கிலாந்து அணி கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதற்கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 1 மற்றும் இந்தியா 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியா 2 – 1 என இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. அண்மையில் முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிந்து விட்டது. இதற்கு காரணம் சுழலும் தன்மை கொண்ட ஆடுகளம் தான் என்ற விமர்சனத்தை வைத்தனர் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள். 

“சுழலும் தன்மை கொண்ட ஆடுகளம் தொடர்பான உரையாடலின் சத்தம் ரொம்பவே அதிகமாக இருப்பதாக உணர்கிறேன். பந்து சுழலுகின்ற ஆடுகளங்களை மட்டும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு ஆட்டம் முடிந்தால் அதற்கு காரணம் ஆடுகளம் என்ற விமர்சனம் வருகிறது. அதுவே நியூசிலாந்தில் நாங்கள் விளையாடிய போது ஆட்டம் மூன்றே நாட்களில் முடிந்தது. அப்போது இந்தியா எவ்வளவு மோசமாக விளையாடியது என்று மட்டும் தான் எல்லோரும் பேசினார்கள். ஏன் அந்த ஆடுகளத்தை குறித்து பேசவில்லை.

இது மாதிரியான களங்களில் விளையாட பேட்ஸ்மேன்களுக்கு போதுமான திறன் இல்லை என்பது மட்டும் தான் நிதர்சனம்” என கோலி தெரிவித்துள்ளார். 

இந்த நான்காவது போட்டியை இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது சமன் செய்தாலோ தான் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட முடியும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே