தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ரன்னிங் டைம் எவ்வளவு?

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜகமே தந்திரம்’. இந்த திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 37 நிமிடங்கள் ஆகும். அதாவது 157 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் என்றும் இந்த படம் 18 பிளஸ் வயதினர் பார்க்கக்கூடிய படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சுரேஷ்கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே