டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மர்ம காய்ச்சல் வந்தால் விரைந்து சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிப்பது குறித்தும், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
நகராட்சி பகுதிகளில் தூய்மையான குடிநீர் வழங்குதல், கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பு என மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.