இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கவேண்டுமா? மீன் சாப்பிடலாம் என ஆய்வில் தகவல்!

இதய நோய் அல்லது பக்கவாதம் உள்ளவர்கள், மீனை சாப்பிடுவதன் மூலம் இதய சிக்கல்களிலிருந்து தப்ப முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய

வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவது இதய நோய் (Cardiovascular Disease (CVD))உள்ளவர்களை அதிக ஆபத்திலிருந்து காக்க உதவும், ஏற்கனவே இதய நோய் அல்லது பக்கவாதம் உள்ளவர்கள், மீனை சாப்பிடுவதன் மூலம் இதய சிக்கல்களிலிருந்து தப்ப முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முக்கியமான மூலப்பொருள் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, அவை CVDயின் மோசமான நிகழ்வுகளான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளை குறைக்கிறது.

ஒவ்வொரு வாரமும் ஒமேகா -3 நிறைந்த மீன்களை இரண்டு முறைக்கு மேல் சாப்பிட்ட உயர் ஆபத்துள்ள மக்களில் ஆறில் ஒரு பகுதியினருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதும் வெகுவாக குறைந்துள்ளது என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும் ஆய்வின் முன்னணி இணை ஆசிரியருமான ஆண்ட்ரூ மென்டே, “இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மீனை சாப்பிடுவது ஒரு நல்ல குறிப்பிடத்தக்க பாதுகாப்பு நன்மையை அளிக்கும்” என்றும் “வாஸ்குலர் நோயாளிகளில் மீன் நுகர்வு மற்றும் குறிப்பாக எண்ணெய் நிறைந்த மீன்களை சாப்பிடுவது இதய நன்மைகளை ஏற்படுத்தக்கூடும்,” என்றும் அவர் கூறினார்.

ஜமா இன்டர்னல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கிட்டத்தட்ட 1,92,000 பேரை உள்ளடக்கியது, இதில் CVD சிக்கலை கொண்டிருப்பவர்கள் சுமார் 52,000 பேர் இருந்தனர். இந்த பகுப்பாய்வு கடந்த 25 ஆண்டுகளில் பி.எச்.ஆர்.ஐ நடத்திய பல ஆய்வுகளின் தரவை அடிப்படையாகக் கொண்டது. இதய நோய் அல்லது பக்கவாதம் இல்லாதவர்களில் மீன் உட்கொள்வதால் எந்த நன்மையும் காணப்படவில்லை என்று குழு பரிந்துரைத்தது.

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது!

ஒமேகா -3 நிறைந்த மீன்களை சாப்பிடுவதன் மூலம் இதய நோய்க்கு குறைந்த ஆபத்து உள்ளவர்கள் CVDயிலிருந்து ஓரளவு பாதுகாப்பை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர் தெளிவுபடுத்தியுள்ளனர், ஆனால் அதிக ஆபத்துள்ள நபர்களைக் காட்டிலும் சுகாதார நன்மைகள் குறைவாகவே காணப்படுகின்றன என்ற செய்தியையும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மீனின் நன்மைகள்…

எளிதாக ஜீரணமாகக்கூடிய ஏராளமான சத்துக்கள் மீனில் இருக்கின்றன. சிறந்த புரோட்டீன் உணவாகவும் மீன் திகழ்கிறது. உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பி-12 வைட்டமின்கள் அதில் இருக்கின்றன. பாதிப்புகள் ஏற்படாத அளவுக்கு இதயத்தை காக்கும் ‘ஒமேகா 3 பேட்டி ஆசிட்’டும் மீனில் இருக்கிறது. பயறு வகைகளை சாப்பிட வாய்ப் பில்லாதவர்களுக்கு தேவைப்படும் சத்தை, மீன் மூலம் பெற்றுவிட முடியும்.

சிறிய வகை மீன்களில் கால்சியமும், நுட்பமான சில வித தாது சத்துக்களும் இருக்கின்றன. வைட்டமின் ஏ மற்றும் டி, அயோடின் போன்ற வைகளும் மீனில் இருக்கின்றன. நினைவாற்றலை வளப்படுத்தும் சக்தியும் மீனில் இருக்கிறது. மீனில் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவைகளை தவிர மீதி அனைத்து சத்துக்களும் மீனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மேலும் இவை இதய நலனை காத்து நம் ஆயுளை நீட்டிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே