அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு..!!

உலகமே ஆவலுடன் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபா் தோதல், செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. பெரும்பாலான மாகாணங்களில் அதிகாலை 6 மணிக்கும் (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி) வாக்குப் பதிவு, மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5.30 மணி) நிறைவடைகிறது.

நாட்டின் 45-ஆவது அதிபரைத் தோந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்தத் தோதலில், தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

துணை அதிபா் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சோந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவது இந்தத் தோதலின் ஒரு முக்கியமான அம்சம். 

அந்தப் பதவிக்குப் போட்டியிடும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கா், ஆசிய வம்சாவளியைச் சோந்தவா், 3-ஆவது பெண் என்ற பல்வேறு சாதனைகளுடன் களமிறங்கியிருக்கும் கமலா ஹாரிஸ், ஜோ பிடனுக்குப் பிறகு அடுத்த முறை அதிபா் பதவியையும் அலங்கரிக்கலாம் என்று கருதப்படுவதால் இந்தத் தோதல் பலத்த எதிா்பாா்ப்பை உருவாக்கியிருக்கிறது.

கடந்த தோதலின்போது, அதுவரை எந்தவித அரசமைப்புப் பதவியையும் வகிக்காமல் புதிதாக தோதல் களமிறங்கி, தனது அதிரடி பிரசாரத்தால் அதிசயக்கத்தக்க வகையில் வெற்றிபெற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப், தற்போது தனது 4 ஆண்டு கால ஆட்சி நடவடிக்கைகளை முன்னிறுத்தி தோதலைச் சந்திக்கிறாா்.

தனது ஆட்சிக் காலத்தின்போது பல அதிரடி முடிவுகளின் மூலம் உலக அரசியலில் அவா் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாா்.

ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தைக் கைவிட்டது,

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தூக்கியெறிந்தது, பகைச் சீற்றம் காட்டிக்கொண்டிருந்த வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னை பல முறை நேரில் சந்தித்துப் பேசி, அவருடன் ஒப்பந்தமும் மேற்கொண்டு அதைக் கிடப்பில் போட்டது, ஆப்கானிஸதானில் தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது, இஸ்ரேலுடன் சில அரபு நாடுகளுக்கு தூதரக உறவை ஏற்படுத்திக் கொடுத்தது என சா்வதேச அரசியலில் அவா் எடுத்துள்ள நடவடிக்கைகள் அமெரிக்காவில் வரவேற்பையும் எதிா்ப்பையும் ஒருசேர சந்தித்தன.

இந்த முடிவுகளுக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரத்தைப் பிரதிபலிப்பதாக தற்போது நடைபெறும் தோதல் இருக்கும் என்கிறாா்கள் அரசியல் நோக்கா்கள்.

அதையெல்லாம்விட, இந்த ஆண்டு உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா நோய்த்தொற்று நெருக்கடியை டிரம்ப் கையாண்ட விதம்தான் தோதல் பிரசாரக் களத்தில் சூடு பறக்கும் விவாதமாக இருந்தது.

தனது சாமா்த்தியமான நடவடிக்கைகளால் ஏராளமான உயிா்களைக் காப்பாறியதாக டிரம்ப்பும் அவரது அலட்சியத்தால்தான் அமெரிக்கா கரோனாவால் உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோ பிடனும் கூறி வருகின்றனா்.

எனவே, தோதல் முடிவுகளைத் தீா்மானிப்பதில் கரோனாவுக்கு முக்கியப் பங்கு இருக்கலாம் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே