ஜார்க்கண்டில் இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு, முறையே நவம்பர் 30, டிசம்பர் 7, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று மொத்தம் 15 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஜமுவா, பகோதர், கிரிதி, தும்ரி மற்றும் துண்டி தொகுதிகளில் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளதாகவும் மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 23 பெண்கள் உட்பட 221 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதியன்று வெளியாக உள்ளன.

இந்நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே