இந்திய அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஹோப் மற்றும் நிக்கோலஸ் ஆகியோரின் அபார சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 288 ரன்கள் குவித்தது.

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

நிகோலஸ், ஹோப் ஆகியோர் அபாரமாக விளையாடி சதமடிக்க, அந்த அணி 48-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே