ஆதாருடன் பான் எண் இணைப்பதற்கான கெடு நீட்டிப்பு..!!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு வரும் 31-ம் தேதி கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

வருமானவரி கணக்கு தாக்கல் மற்றும் பான் எண் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்த அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதன்படி ஆதாருடன் பான் எண்ணை வரும் 31-ம் தேதிக்குள் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே அதிகாரிகள் வட்டத்தில் கூறுகின்றனர்.

அதன் இணையதளத்தில் லிங்க் ஆதார் என்ற பகுதிக்குச் சென்று பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டால் இணைப்பு பணி முடிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே