மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம்..!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை திருப்பரகுன்றம் தொகுதியில் இருக்கும் தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, கட்டுமான பணி மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார். 

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர்களாக, டாக்டர் சுதா சேஷய்யன் -எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், மத்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டாக்டர் சண்முகம் சுப்பையா – கே.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே