வைரல் செய்தி… சிக்கனால் கோமாவிலிருந்து மீண்ட இளைஞர்..!!

62 நாட்கள் கோமாவில் இருந்த தைவான் இளைஞருக்கு சிக்கன் என்ற வார்த்தையை கேட்டு சுயநினைவு வந்துள்ளது.

பலருக்கும் அசைவ உணவு என்றால் கொள்ளை பிரியம். நமக்கு பிடித்த உணவை அடிக்கடி ருசி பார்க்கவே விரும்புவோம். அதிலும் உலகளவில் சிக்கன் பிரியர்கள் அதிகம்.

அந்தவகையில் தைவானில் இளைஞர் ஒருவர் கோமாவில் இருந்து மீண்டு வருவதற்கு அவருக்கு மிகவும் பிடித்த சிக்கன் உதவியாக இருந்துள்ளது.

தைவானில் 18 வயது இளைஞர் ஒருவர் மோசமான விபத்து ஒன்றை சந்தித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இதில் அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் ஆறு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். 

உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தும், அவரை சுயநினைவை கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில் அவரது சகோதரர் சிக்கன் ஃபில்லெட் பற்றி பேசியுள்ளார். ‘உனக்கு பிடித்த சிக்கன் ஃபில்லெட்டை நான் சாப்பிடப் போகிறேன்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

ஆனால் அதன்பிறகு நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சிக்கன் என்ற வார்த்தையை கேட்டவுடன் அந்த இளைஞருக்கு சுயநினைவு வந்துள்ளது.

அதுவரை கோமாவில் இருந்தவரின் உடல் படிப்படியாக குணமாக ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அவர் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேக் வழங்கி நன்றி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே