நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ விடியோ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

நீண்ட தாமதத்துக்குப் பிறகு வரும் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது மாஸ்டர்.

இதனிடையே, திரையரங்குகளிலும் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், மாஸ்டர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தினமும் மாலை மாஸ்டர் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, வாத்தி கம்மிங் பாடலின் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே