10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் – திருப்பதி தேவஸ்தானம்

திருமலையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனத்திற்கு அனுமதி வழங்குவது என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

விஐபிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசன முறை அண்மையில் ரத்து செய்யப்பட்டது.

ஆலய மேம்பாட்டுக்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்குவோருக்கு விஐபி தரிசனம் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்துடன் 500 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேவஸ்தானத்தில் பணியாற்றுவோர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அனுமதி கடிதம் மற்றும் 500 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்தினால் விஐபி தரிசனம் செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது.

இந்த நிலையில் விஐபி தரிசன டிக்கெட்டை இடைத்தரகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில், இந்த அதிரடி முடிவை தேவஸ்தானம் எடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே