வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் ஆல் இன் ஒன் என்ற புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி மாத கட்டணம் 222 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு 333 ரூபாயும், மூன்று மாதங்களுக்கு 444 ரூபாயும் செலுத்த வேண்டும்.
நாள்தோறும் 2 ஜிபி டேட்டா உடன் ஜியோ நிறுவனம் செல்போனுடன் காலவரையின்றி பேசிக்கொள்ள முடியும். மற்ற நிறுவன செல்போனுடன் ஆயிரம் நிமிடங்கள் பேசிக் கொள்ள முடியும்.
இதன்மூலம் கூடுதலாக 111 ரூபாய்க்கு ஒரு மாத சேவையை பெற முடியும்.
மற்ற செல்போன் நிறுவனங்கள் மாதத்துக்கு 249 ரூபாய், இரண்டு மாதங்களுக்கு 500 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.