திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.26 கோடி மதிப்பில் நாணயங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை யில் சுமார் 26 கோடி ரூபாய் அளவிற்கு நாணயங்கள் தேவஸ்தான கருவிலத்திற்கு சமீபத்தில் சேர்ந்து இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் ஆண்டுக்கு சுமார் 1200 கோடி ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியலில் செலுத்திய காணிக்கையை மாற்றுவதற்கு பெரும் சிரமமாக இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நாணயங்களை மூட்டைகளில் கட்டி அதற்கென ஒரு தனி அறையில் மலை போல் குவித்து வைத்து இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில், சுமார் 25 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் நாணயங்கள் உண்டியல் காணிக்கையாக சேர்ந்திருக்கிறது.

இவற்றையும் சேர்த்து சுமார் 85 ஆயிரம் நாணய மூட்டைகள் இருந்ததாகவும், அதில் சமீபத்தில்தான் எழுபத்தைந்தாயிரம் மூட்டைகளை மாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீதமுள்ள 15 ஆயிரத்து 928 மூட்டைகளில் நாணயங்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே