விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொலை வழக்கு : சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

விழுப்புரத்தில் மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

சென்னை ஆவடியைச்சேர்ந்த சுமதி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் ,விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு படித்துவந்த ஜெயஸ்ரீ என்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் இருவரும் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறியுள்ளார்.

விழுப்புரம் சிறுமியைக் கொன்றது ஏன்? – கைதானவர்களின் வாக்குமூலம்

இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

,ஆனால் அவர்கள் இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

எனவே தமிழக காவல்துறை விசாரித்தால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது என்றும் எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே