செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே வெளிநாட்டில் உள்ள தந்தை உடன் வீடியோ கால் பேசும் போது, செல்போன் வெடித்து, இளம்பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார்.
இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார்.
செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அவர் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென பலத்த சப்தத்துடன் செல்போன் வெடிக்க, உடைந்த பாகங்கள் ஆர்த்தியின் கண் மற்றும் காதுக்குள் சென்றன.
இதனால், வலியில் அலறித்துடித்த ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.