ஜூன் 30ந் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த உத்தரவு

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 30ந் தேதிக்குள் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு தமிழக அரசால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக விஷால் தரப்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

விசாரணையின் போது ஜூன் 30க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

அவருக்கு சம்பளமாக தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரி 3 லட்சம் ரூபாய் வழங்கவும், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட விவரங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஜூலை 30-க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே