பிரதமர் மோடி நேற்று அறிவித்த ரூ20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் குறித்து இன்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்கிறார்.

ரூ20 லட்சம் கோடி பொருளாதார உதவித் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் விவரிக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் மோடி அறிவித்த ஆத்ம நிர்பார் என்பதன் தமிழ் அர்த்தம் சுயசார்பு பாரதம்

சுய சார்பு பாரதம் என்ற பெயரில் ரூ20 லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்

சுய சார்பு இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி 5 அடிப்படை கட்டமைப்புகளை அறிவித்திருந்தார்

பொருளாதாரம், உட்கட்டமைப்பு, தொழில்திறன், மக்கள் வளம், பொருளின் தேவை- 5 அடிப்படை தேவைகள்

லாக்டவுன் காலத்தில் உஜ்வாலா போன்ற பல திட்டங்கள் ஏழைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன

லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது- நிர்மலா சீதாராமன்

ஏழைகளுக்கு இதுவரை ரூ18 ஆயிரம் கோடி மதிப்பிலான 48 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பொருளாதார செயல் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் கடனுதவி; அடமானமாக சொத்துக்கள் எதையும் காட்டத்தேவையில்லை. இதற்காக மூன்று லட்சம் கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்

45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. 4 ஆண்டு காலங்களில் திருப்பிச் செலுத்தும் கடன்கள் வழங்கப்படும். 12 மாதங்கள் கழித்துதான் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலமும் தொடங்கும்

நெருக்கடியில் உள்ள சிறுகுறு நிறுவங்களுக்கு சிறப்பு கடன் உதவி. இதற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் பயனடையும்: நிர்மலா சீதாராமன்

வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும் – நிர்மலா சீதாராமன்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன

ரூ200 கோடி மதிப்பிலான அரசு பணிகளுக்கு இனி சர்வதேச டெண்டர்கள் கோரப்படாது- நிர்மலா சீதாராமன்

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே