விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது; வதந்திகளை நம்ப வேண்டாம் – தேமுதிக விளக்கம்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே