ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இது தொடர்பான செய்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்தது.
இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிர்பிழைக்க மாடியில் இருந்து குதித்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.