#BREAKING : 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு..!!

101 வகையான பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அமைப்புடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

என்னென்ன பொருட்கள் இறக்குமதி செய்ய தடை..?

  • பீரங்கி துப்பாக்கிகள், துப்பாக்கிகள், போக்குவரத்து விமானம், ரேடார் உள்ளிட்டவற்றுக்கு தடை
  • இந்த தடையை 2020 முதல் 2024 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக அமல்படுத்த திட்டம்

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே