மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதி.

‘பிசாசு 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிசாசு’. நாகா, ராதாரவி, ப்ரயாகா மார்டின் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

தற்போது இந்தப் படத்தின் 2-ஆம் பாகம் உருவாகிறது. ‘பிசாசு 2’ என்ற டைட்டிலுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிகை ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் விஜய் சேதுபதியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நடிகை ஆன்ட்ரியா படத்தின் ஒரு காட்சிக்காக நிர்வாணமாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் மிஷ்கின் – கார்த்திக் ராஜா கூட்டணி முதல்முறையாக இணைகிறது. லண்டனைச் சேர்ந்த சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆன்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்ததோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே