ஐ.பி.எல். போட்டிகள் ஏப். 9-ல் தொடக்கம்

2021 ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி 4வது முறையாக வெற்றிவாகை சூடியது. இந்நிலையில், இந்தாண்டுக்கான வீர்ர்கள் தேர்வு செய்யும் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதனால், விரைவில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பிசிசிஐ அதிராகப்பூர்வமாக ஐபிஎல் தொடங்கும் தேதியை இன்று அறிவித்தது. அதன்படி முதல் போட்டி வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப்போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே