பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை மனதில் வைத்து ரஜினியின் தர்பார் படத்தில் இடம்பெற்று வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் தர்பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹேப்பியாகி ஆட்டம்,பாட்டம் என்று தர்பாரை தாறுமாறாக தெறிக்கவிட்டு, கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்.

அது வழக்கமாக ரஜினியின் படத்தில் அரசியல் வரும். ஆனால் இந்த படத்தில் சில காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படத்தில் ஒரு காட்சி, ரஜினி ஜெயிலுக்குள் நடந்து சென்று கொண்டிருப்பார், அப்போது கைதி ஒருவர், செல்போனில் ஜோராக பேசிக்கொண்டு இருப்பார்.

அதை பார்த்து சிறை வார்டனிடம் உள்ளே செல்போன் எல்லாம் உண்டு போல என்று கேட்பார்.

அதற்கு அந்த சிறைவார்டன், காசு இருந்தால் போதும் சார், ஷாப்பிங்கே போய்ட்டு வரலாம் என்பார்.

இதே போல மற்றொரு காட்சி, அதில் சிறைக்குள் ஆள்மாறாட்டம் நடக்கும். அதுபற்றி மேல் அதிகாரிகளுக்கு ரஜினி கூறுவார்.

அப்போது நான் கூட தென் இந்தியாவிலும் இதே போல சிறையில் இருந்து அவ்வப்போது ஒரு பெண் கைதி வெளியே போய் வருவதாக கேள்விப்பட்டேன் என்பார்.

இதிலும் சசிகலா அனைவரின் ஞாபகத்துக்கு வந்து போகிறார்.

தர்பார் படத்தில் பேசப்படும் இந்த 2 வசனங்களுமே ரஜினி பேசவில்லை. ஆனாலும், சசிகலா மீதான ஏதோ ஒரு கோபத்தின் காரணமாகத்தான் அவரும் இந்த வசனத்தை அனுமதித்து இருக்கிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே