கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ என்ற பாடல் யூடுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக ஜி. வி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் பகிர்ந்துள்ளதாவது, இது தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனெனில் இது எனது 50வது படம் என்றும் கூறியுள்ளார். தற்போது இதனை தளபதி ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருவதோடு, ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.