நடிகை ரவீணா உள்ளிட்ட 2 பேர் மீது மத நம்பிக்கை அவமதிப்பு வழக்கு..!!

கிறிஸ்தவ மத உணர்வுகளை அவமதித்ததாக நடிகை ரவீணா டாண்டன் உள்ளிட்டோர் மீது பஞ்சாப் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவீணா டாண்டன், இயக்குநர் பராகான், நகைச்சுவை நடிகை பாரதி சிங் ஆகியோர் கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விமர்சனங்களை மேற்கொண்டதாக தொடர்புடைய நிகழ்ச்சியின் வீடியோ ஆதாரத்துடன் அஜ்னாலா நகர கிறிஸ்துவ முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மத நம்பிக்கைகளை அவமதித்தல் என்ற பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அஜ்நாலா போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே