விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் அக்டோபா் மாதம் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 20 மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசினார்.

அப்போது, நடைபெறவிருக்கிற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடலாம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே