நில அபகரிப்பு திமுகவினரின் முழுநேரத் தொழில் : ராமதாஸ்

பஞ்சமி நிலம் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாக காட்டி இருக்கும் ஸ்டாலின், அதற்குரிய ஆவணங்களை காட்டாதது ஏன்?? அவை எங்கே?? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது?? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது?? அவற்றை விடுத்து 1985 ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவதின் மர்மம் என்ன என்றும் வினவியுள்ளார்.

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்ததாகவும், ஆனால் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனையை குறிப்பிடும் ஸ்டாலினுக்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்ததை அறிவாரா?? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நில அபகரிப்பு திமுகவினரின் முழுநேரத் தொழில் என விமர்சித்துள்ள அவர், அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பான அதிமுக அரசு அளித்த அறிக்கையை 2007-இல் ஆட்சியின்போது திமுகவினர் ரத்து செய்ததையும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே