நடிகை மீரா மிதுன் மீது புகார் அளித்த விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய் குறித்தும், அவரது மனைவி குறித்தும் சமூகவலைதளத்தில் அவதூறு பேசி வரும் நடிகை மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

`8 தோட்டாக்கள்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மீரா மிதுன்.

மாடலிங்கில் கலக்கிய இவருக்கு சினிமாவில் அந்த அளவுக்கு நடிக்கவில்லை. ஆனால் பிக்பாஸ் மூலம் பிரபலமானார்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர், தற்போது, சினிமாவில் வாரிசு ஆதிக்கம் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்.

நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரின் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசிய மீரா மிதுனுக்கு எதிராக கொந்தளித்தனர் அந்த நடிகர்களின் ரசிகர்கள்.

தன்னை திட்டி தீர்த்து வீடியோ வெளியிட்டு வரும் விஜய், சூர்யா ஆகியோரின் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக மீரா மிதுனை ட்வீட் போட்டிருந்தார்.

இதே நேரத்தில் பப்ளிசிட்டிக்காக மீரா மிதுன் இப்படி நடந்து கொள்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதனிடையே, மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை நகர தலைவர் ஆதிராஜாராம் ஒன்றிய தலைவர் மதன் உள்ளிட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில், விஜய் பற்றி கருத்து தெரிவித்ததற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே