Breaking: சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் ஆக10 முதல்… “சிறிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி”.. தமிழக அரசு!!

சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் வரும் 10ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் வீரியம் சற்று குறைந்து வருகிறது. அதன்படி 7ம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் 10ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்.

ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. ஏற்கனவே பொது மக்கள் தரிசனத்திற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே