உண்மைக்கு கிடைத்த வெற்றி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, உண்மைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

இரு தொகுதிகள் இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி முகம் கண்டதை அடுத்து முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகை புரிந்தார்.

அங்கு அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு வரலாற்று வெற்றி என்றார்.

அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரின் உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும், வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். 

தர்மம் , நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பது இந்த வெற்றியின் மூலம் நிரூபனம் ஆகியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

செய்ய முடிவதை மட்டும் மக்களிடம் சொல்லுவோம், செய்ய முடியாததை மக்களிடம் சொல்ல மாட்டோம் என்றார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால் அந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கு முன் அதன் உண்மை தன்மை என்ன என்பதை அரசு ஆராயும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே